Tuesday, December 16, 2008

அதென்ன உட்டாலக்கடி வேலை?

அதென்ன பாரபட்சம் ?
தமிழ்மணம் ஒரு திரட்டி .அதில் இடுகைகளை புதியவர்களும் இடுகிறோம்,பழைய பதிவர்களும் இடுகிறார்கள்.எப்போது பார்த்தாலும் ஒரு சில பதிவர்களின் இடுகைகள் மட்டுமே சூடான இடுகைகளிலும்...வாசகர் பரிந்துரைகளிலும் வருகிறது,இது எப்படி சாத்தியம்? அப்படி சூடான இடுகைகளில் வரும் பதிவுகள் தான் நல்ல பதிவுகளா என்ன? எந்த அடிப்படையில் சூடான இடுகைகள் தேர்ந்தெடுக்கப் படுகின்றன?அதிக பின்னூட்டங்கள் பெற்ற இடுகைகள் தான் சூடான இடுகைகளா?அப்படியானால் பதிவர்களே அனானி பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டும்...கருத்துக்கள் அற்ற வெறும் கண் துடைப்பு
( உதாரணம்:- மீ த பஸ்ட்...
டூ...
த்ரீ...
இன்பினிட்டி...
)என்று பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டால் அதையும் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் இங்கே வாசகர் பர்ந்துரை தேர்ந்தெடுக்கப் படுகிறதா?ஒரு சில பதிவுகளைத் தவிர பெரும்பாலான பதிவுகளும் சூடான இடுகை மற்றும் வாசகர் பரிந்துரைகளில் வருபவை எல்லாம் அப்படி கருத்து செறிவோ...விஷய ஞானமோ உள்ள பதிவுகளாகத் தெரியவில்லையே?! உண்மையில் பதிவுகள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப் படுகின்றன? இந்த லட்சணத்தில் விருதுகளை வேறு அறிவித்திருக்கிறீர்கள்!விருதுகள் எந்த அடிப்படையில் அளிக்கப் பட இருக்கின்றன என்பது குறித்தும் தெளிவான விளக்கம் எதுவும் இதுநாள் வரையிலும் இல்லை.யாரை ஏமாற்ற இந்த அறிவிப்பு? யாருடைய இடுகை விரைவாக சூடாகிறதோ அவர்களுக்கு கொடுத்து விட்டுப் போவதற்க்கேன் அறிமுகப் பதிவர்களில் இருந்து சில மென் பதிவர்கள் (இவர்கள் யாரையும் திட்டியோ தனி மனித தாக்குதலிலோ ஈடுபடாதவர்கள்) வரை எல்லோரையும் ஏமாற்ற வேண்டும் ?ஐயா தமிழ் மன நிர்வாகிகளே...பழம் பெரும் ...முத்து பெரும் பதிவர்களே...உங்களுக்குத் தெரிந்தால் நீங்களாவது சொல்லுங்கள் ...புதியவர்களது நல்ல ரசனையான பதிவுகள் பிரபலமாக என்ன தான் செய்து தொலைக்க வேண்டும் என்று??????????????????? இங்கே யோசித்து யோசித்து மண்டை காய்கிறது.ஏன் வெளிப்படையாகவே கேட்கிறேன்....உண்மையைச் சொல்லுங்கள்.
லக்கிலுக்
அதிஷா
கார்க்கி
தாமிரா...
பரிசல்காரன்...
இவர்களது பதிவுகள் மட்டும் தான் சூடாகுமா?
ஏன் இவை மட்டும் தான் ரசனை மிக்க பதிவுகளா?
ஏன் இவர்களை மட்டும் தூக்கி வைத்துக் கொண்டு தமிழ்மணத்தில் கொண்டாடுகிறார்கள்?
இவர்களது பதிவுகள் நன்றாக இருந்தாலும் ....இவர்களை விடவும் அர்த்தமுடன் சில பதிவர்கள் பதிவுகளை இட்டிருக்கின்றனரே !!!நான் ரசித்த அந்தப் பதிவுகளை ஏறக்குறைய எல்லோருமே ரசித்திருப்பார்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.உதாரணத்திற்கு ;
துளசிதளம்
சித்திரக்கூடம்
அபிஅப்பா
முரண்தொடை
இப்படிப் பல ....
ஏன் இவர்களது பதிவுகள் எல்லாம் சூடான இடுகைகளில் இல்லை ?யாராவது பதில் சொல்லுங்கப்பா ?!

2 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

.இவர்களை விடவும் அர்த்தமுடன் சில பதிவர்கள் பதிவுகளை இட்டிருக்கின்றனரே !//


எழுதிட்டீங்கல்ல.... இதுவும் சூடான் இடுகையாயிடும்

கார்க்கிபவா said...

ஸப்பா ஏன் இவ்ளோ கோவம்?

நான் கூட ஆரம்பத்துல இப்படித்தான் நினைச்சேன். ஆன உண்மை அது இல்லைங்க..

சூடான இடுகைகள் என்பது நிர்றைய பேர் தமிழ்மந்த்தில் இருந்து க்ளிக் செய்து போவதை கணக்கில் கொண்டு செயல்படுகிரது. அதிலும் லக்கியின் பெயர் இப்போது வருவதில்லை.

பரிந்துரை வாக்குகள் அடிப்படியில்.

நீங்க சொன்ன எல்லா பதிவர்களும், நானும் அனானி பின்னூடங்கள் அனுமதிப்பதில்லை.

விருதுகள் பற்றி எனக்கும் புரியல..