Friday, April 17, 2009

நானும் கட்சி ஆரம்பிக்கப் போறேன் ...ஓட்டுப் போடுங்க மக்களே

ஊருக்குள்ள நாலு பேத்துக்கு நம்மள அடையாளம் தெரிஞ்சிக்கிட்டாலே அவனவன் தான் ஒரு பிரபலம்னு நினைச்சுகிறான்யா...அது கெடக்குது கழுதை ?! அதை விட்ரலாம் ...அதான் குமுதத்துல "நீங்கள் ஒரு நிமிடச் சாதனையாளர்கள்னு "லேனா தமிழ்வாணன் சொன்ன விஷயம் ஞாபகத்து வந்ததால முதல்ல அந்த விஷயத்தை சொல்லிட்டேன்.

இப்போ விஷயம் என்னனா ?

அதென்னங்க இங்க நம்ம தங்கத் தமிழ் நாட்டுல மட்டும் எப்போ பாருங்க கட்சி ஆரம்பிக்கிறதெல்லாம் கடந்த சில வருஷமா நடிகருங்க மட்டும்னே ஆயிப் போச்சு ?! என்ன கொடுமைங்க இது ? யாரெல்லாம் அப்படி ஆரம்பிச்சிருக்காங்கனு பாருங்க ?

முதல்ல நம்ம விஜயகாந்து அண்ணன்

பின்ன நம்ம கார்த்திக்கு கூட கொஞ்ச நாலு பார்வர்டு பிளாக்குன்னு ஒரு கட்சிக்கு தலைவரா இருந்து அந்தக் கட்சியவே இப்போ காணாம அடிசிட்டாராக்கும்

அப்புறம் நம்ம நாட்டாமை கூட ச.ம.க ஆரம்பிச்சாருங்க .சித்தி ஓட்டு அவருக்குத்தான் சந்தேகமில்லை ...அதுக்குன்னு எல்லாருமே கண்ண மூடிட்டு ஓட்டுப் போட்டு நம்மள முதலமைச்சரு நாற்காலில உட்கார வச்சிபிடுவாகனு எப்பிடித்தேன் இவுகளாம் நம்பி வாராகளோ !!!

பிரபு கூட காங்கிரசுல சேர்ந்து நாட்டுக்கு சேவை பண்ணப் போறாராமே! சொல்லிக்கிட்டே இருக்காக இன்னும் செயல்ல இறங்கலை போல இருக்கு !!!(அய்யன் கட்சி ஆரம்பிச்சு பட்ட அடி ஞாபகமிருக்கு போல இருக்கு புள்ளைங்களுக்கும்!)

இப்ப விஜய் வேற கட்சி ஆரம்பிக்கப் போறாராம் ,பத்திரிக்கைகாரவுக பக்கம் பக்கமா போட்டுக்கறாக...நடிகரு முதலமைச்சரு ஆகக் கூடாதுன்னு யாராச்சும் சொல்லுவாகளா என்ன? வாங்கண்ணே...நீங்களும் வாங்க ...வந்து இந்த பந்தியில குந்துங்க ,வடை கிடைச்சா வடை...இல்லாங்காட்டி பாயாசம் !!!

எப்படியோ ஓட்டைப் பிரிச்சா சரிதான்

அதான நம்ம முன்னாள் தலைவர்களோட ஆசை ;

இந்நாள் தலைவர்களே நீங்களும் பயிற்சி தான எடுத்துகறிங்க அதனால சோர்வு வேண்டாம் ,சீக்கிரமே ...இருக்கறது ஆறரைக் கோடி ஜனம் இதுல ஓட்டுப் போடப் போகாதவுக சோத்தையும் சேர்த்துத் திங்க ஆளிருக்கும் எல்லா ஓட்டுச் சாவடியிலயும்...பின்ன என்ன செத்தவங்க ஓட்டு சாகாதவன் ஓட்டு எல்லாத்தையும் போட்டு இன்னொருக்கா தலைவரையோ இல்லனா தலைவியையோ ஜெயிக்க வச்சிப் போட்டு வாங்கித் தந்த பிரியாணியை ஒரு கட்டு கட்டிட்டு மத்தியானம் வீட்டுக்கு வந்து குப்புறப் படுத்து குறட்டை விட்டுத் தூங்க தான் போறோம் .

திடீர்னு தான் இப்படி ஒரு யோசனை ஓடுச்சு மனசுக்குள்ள ...சாப்பிட்டு மத்தியானம் சாம்பார் வாசம் கைல மணக்க மோந்து பார்த்துகிட்டு திண்ணைல உட்க்கார்ந்தனா அப்படியே சிந்தனை இப்பிடிக்காப் போச்சு ...

என்னாங்கறிங்களா ?

அதொண்ணுமில்லை இந்த நடிகருக கட்சி ஆரம்பிக்கிறதும் ...வாய்ஸ் கொடுக்கிறதும் தன்னை ..தன் வசதி ..வாய்ப்பை ...தன் பாதுகாப்பை பலப் படுத்தத்திக்கத் தானே தவிர ! சும்மாங்காட்டி நாட்டுக்கு சேவை பண்ணுரதுக்கோசரம் இல்லைங்குது புத்தி ..

சரி தானுங்களே!