Saturday, December 13, 2008

தினம் பல் விளக்குபவர்கள் மட்டும் இதைப் படிங்க இல்லாங்காட்டி போய்க்கினே இருங்க...!!!

தினம் ஆயிரத்து சொச்ச டூத் பேஸ்ட் விளம்பரம் டி.வி ல வருதில்ல...அதப் பார்த்து அதுல வர்ற எதோ ஒரு பேஸ்ட் வாங்கி வீட்ல போட்டுக்கறோம் .இப்ப கேள்வியே ஒரு மாசத்துக்கு நீங்க எத்தினி பேஸ்ட் வாங்கி உங்க பல்ல விளக்கறிங்க? நானும் நிறைய இடத்துல பாத்துபுட்டேன்,
அட என்னா கொடுமைன்னா மாசம் நாலு பேஸ்ட் வாங்கியும் பத்தலையாம் சில வீடுகள்ல?!என்ன தான் பண்றாக ...ஃபேரன் லவ்லிக்கு பதிலா மூஞ்சில தேச்சுக்கறாங்கலோனு பீதியாவுது. இல்லாங்காட்டி டியுப்ள விக்கிற சாக்லேட்டுனு தின்னே தீக்குராங்களோ...? என்ன தான் பண்றாகன்னு research பண்ணிப் பார்த்தாக்க அப்புறம் தெரிஞ்சது சூட்ச்சுமம் !
பேஸ்ட் கம்பெனிக்காரன் விளம்பரம் பார்த்து பேஸ்ட் வாங்கற நம்ம மன்னாரு மொக்கைச் சாமிகள் அதுல இலவசமா தர்ற பிரஷ் நீளத்துக்கு பேஸ்ட்டைப் பிதுக்கி தினம் தேய்க்கிறான் பல்லு .ஆனாலும் நாத்தம் மட்டும் போகல ?!அண்ணன்களே...தம்பிகளே....அக்காக்களே...தங்கச்சிகளே ...பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!) இருக்குல்ல அதுல சும்மா இத்தனூண்டு பட்டாணி சைஸ் ல பேஸ்ட்டைப் பிதுக்கித் தேச்சா போதும் .பல்லு விளங்கிரும்.இது நான் சொல்லல ...பல் மருத்துவர்கள் சொன்னது.
எல்லாரும் தெரிஞ்சிக்கட்டுமே நு இங்கன கூவினோம்.
அப்புறம் வரட்டுமா...நாளைக்குப் பார்போம்.
எத்தினி பேரு நான் சொன்னத கேட்ருக்காகனு ....

4 comments:

G.Ragavan said...

நீங்க சொல்றத ஒத்துக்கிறேன். பிரஷ் முழுக்க ஏன் பேஸ்ட்டு வைக்குறாங்கன்னே தெரியலை. அதுனால வாய் மொழுக்க நொறை வெற. கொஞ்சமா வெச்சித் தேச்சாலே போதும்.

karthiga said...

வாங்க ராகவன்
கருத்து சொல்லி நீங்க தினம் பல் விளக்குபவர்னு நிரூபிச்சதுக்கு நன்றீங்கண்ணா .
தொடர்ந்து வாங்க

அன்புடன் அருணா said...

வந்துட்டேன்....வரல்லைன்னா பல் விளக்காதவங்க கூட்டத்துலே சேர்த்துடுவீங்களே????
அன்புடன் அருணா

அன்புடன் அருணா said...

பல் விளக்குவான்(அதாங்க பிரஷ்!!!)

அருமையான அருஞ்சொற்பொருள்....
அன்புடன் அருணா