Wednesday, January 28, 2009

அவள் மனைவி !!!

நெற்றிக் கண்

திறப்பினும்

குற்றம் குற்றமே!

குற்றம் பார்க்கில்

சுற்றம் இல்லை !

எதை விடுப்பது?

எதை எடுப்பது ?!

தொடர்பு எல்லைக்கு அப்பால்

போகத் துணிந்த

கணவரை எதிர் நோக்கி

உதடுகளைப்

பற்களால் அழுத்திக் கொண்டும்

விரல்களால்

நம்பர்களை அழுத்திக் கொண்டும்

மறுபடி

மறுபடி...

மறுபடியும்

காத்திருப்பாள்

அவள்

மனைவி !!!

3 comments:

முரளிகண்ணன் said...

நல்லா இருக்கு

ஆதவா said...

இரு மொழிகளும் கால சூழலுக்கு ஏற்ப எடுத்துக்கொள்ளக்கூடியவை.. இரண்டையும் குழப்பித்தான் அவள் நம்பர் சுழற்றுகிறாளோ???

அவள் மனைவி என்ற பதத்திற்கு வேறு சொல்லை அல்லது அகற்ற முயற்சிசெய்யுங்கள்...

நல்ல கவிதைங்க.. பாராட்டுக்கள்

நட்புடன் ஜமால் said...

\\உதடுகளைப் பற்களால் அழுத்திக் கொண்டும் விரல்களால் நம்பர்களை அழுத்திக் கொண்டு\\

மிகவும் இரசித்தேன்.