அன்னையில இருந்து இன்னைய வரைக்கும் நமக்குப் பிடிச்சிப் போன விளம்பரங்கள வரிசைப் படுத்தி பார்த்தா என்னான்னு தோணுச்சா உடனே பிளாஸ் பேக் ஓட்டிட்டோம்.முந்தியெல்லாம் விளம்பரம் கம்மி தானுங்களே,இம்பூட்டு விளம்பரமெல்லாம் இல்லிங்களே!இப்பமெல்லாம் விளம்பரத்துக்கு நடுவுல தான் படமோ நாடகமோ பாக்க முடியுது...அன்னிக்கெல்லாம் நாங்க சின்னப் புள்ளைகளா இருக்கையில இம்புட்டு விளம்பர தொந்தரவு இல்ல தான் .சரி அத்த விட்டறலாம் .
எனக்கு நெனவு தெரிஞ்சி மறக்காம இருக்க விளம்பரங்களை எல்லாம் சொல்லத் தானே இந்தப் பதிவே...
மொதோ மொதோ ஞாபகம் வாறது எதுன்னா?
நம்ம ரெடி மெனி ஷாப் விளம்பரமுங்க (மணி பர்ஸ் மாதிரி ஒரு பொம்மை ரெடி மேனி ஷாப் ரெடி மனி ஷாப்னு சொல்லிக்கிட்டு பறந்து பறந்து வரும் பாருங்க அதாங்க...
அப்புறமாட்டு கேதான் பேன் ...உஷா பேன் ...கூடவே சொல்லாம இருக்க முடியுமா "ஓரியன்ட் பேன் " விளம்பரமுங்க. இப்பலாம் எ.சி ..எ.சி ன்னு அலையறமுள்ள அன்னிக்கெல்லாம் பேன் வாங்கறவங்க ரொம்ப ஜாஸ்திங்க. அதான் இம்புட்டு பேன் விளம்பரமாட்டு இருக்கும்னு இப்ப நினைசுக்குவேனுங்க நானு.
ப்ராமிஸ் டூத் பேஸ்ட் விளம்பரம்.
ரீகல் சொட்டு நீலம் "சொட்டு நீலம் டோய் ...ரீகல் சொட்டு நீலம் டோய் "(மறந்துற முடியுங்களா?!)
உட்வார்ட்ஸ் கிரேப் வாடர் விளம்பரம் (" நான் குழந்தயா இருக்கச்சே எங்கம்மா இத தான் கொடுத்தாங்க")
அரவிந்த சாமி வருவாரே அந்த லியோ காப்பி விளம்பரம் ...சாலிடர் டி.வி விளம்பரத்துக்கு கூட இவர் நடிகை கீதா கூட வந்ததா ஞாபகமிருக்கு பாருங்க எனக்கு.
மனோரமா வர்ற போலியோ விளம்பரம்...
ராலே டயர்ஸ் விளம்பரம் ...
ஸ்ரீ தேவி வர்ற "சூர்யா பல்பு விளம்பரம்"
அன்னிக்கெல்லாம் இந்த மிளகாப் பொடி விளம்பரமெல்லாம் (சக்தி மசாலா...ஆச்சி மசாலா)பார்த்தா மாதிரி ஞாபகத்துல இல்லைங்க.இதுகள்லாம் இப்பம் ஒரு பத்து இருபது வருஷம் மின்னே வந்ததாக்கும். அன்னைக்கு பிரஸ்டீஜ் குக்கர் விளம்பரம் பார்த்த ஞாபகம் கூட அம்புட்டுக்கு இல்லைன்னு தான் சொல்லணும் .
ஒனிடா டி.வி விளம்பரம் ரொம்ப நாளாவே இருக்குதுங்க(தலைல கொம்பு மொளைச்ச வால் நீண்ட மனுஷன் ! ஒருத்தன் வருவானே( அண்டை வீட்டுக் காரர்கள் பொறாமைப் படடடும்ணு எதையோ சொல்லிட்டுப் போவான்)
சுமங்கலி ஷாம்பூ விளம்பரம் பார்த்திருக்கேன்.
சிக் ஷாம்பூ விளம்பரம் ..வெல்வெட் விளம்பரம்...ரெக்சோனா சோப்பு ...லக்ஸ் சோப்பு விளம்பரம்...ஐநூத்தி ஒன்னு துவைக்கற சோப்பு விளம்பரம்.வீல் சோப்பு .
எல்லாத்தையும் விட முக்கியாமான சங்கதி ஒன்னை சொல்ல விட்டுப் போச்சு பாருங்க.இதானுங்க ரொம்ப ரொம்ப பேமஸ் .
பி.டி.உஷா காடு மேடெல்லாம் ஓடி ஓடி தேடற கண்ணன் தேவன் டீ விளம்பரமும் ,
நம்ம ஊர் உசிலை மணி பிரமாதமா "பேஷ்..பேஷ் சொல்ற நரசூஸ் காப்பி" விளம்பரமும் இல்லாம அன்னைக்கு டி.வி ல ஒரு மணி நேரம் கழிஞ்சிடக் கூடுமா என்ன?
அது ஒரு காலம் இப்பவெல்லாம் அந்த விளம்பரங்களை பார்க்க முடியலை .இன்னிக்கு வர்ற விளம்பரங்களும் நல்லாத் தான் இருக்கு கண்ணுக்கு குளு குளுன்னு ,சில விளம்பரம் என்னவோ போர் அடிக்குதுங்க மறுக்கா பார்க்க,அன்னைக்கு அப்படி எந்த விளம்பரமும் போர் அடிச்சா மாதிரி தெரிலங்க.
இங்கன நான் கிறுக்குனத யாருனாச்சும் படிச்சிங்கன்னா ரெண்டு வார்த்த உங்களுக்குப் புடிச்ச விளம்பரம் எதுன்னும் சொல்லி போட்டு போயிருங்க .என்னங்க நான் சொல்றது ? சரி தானுங்களே...?
Friday, December 11, 2009
Subscribe to:
Posts (Atom)